மு.கருணாநிதிக்கு என்ன ஆனது! பதற்றத்தில் தமிழ்நாடு

சென்னை, ஜூலை 26-

திமுக தலைவர் மு.கருணாநிதி சிறு காய்ச்சல்தான் வந்துள்ளதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதானால் பரவி வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாகவே வயது முதிர்வு, மற்றும் உடல்நிலை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். உடல்நலனில் பிரச்னை ஏற்படும் சமயங்களில் கவேரி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். கடந்த 18ஆம் தேதி கூட அவருக்கு, தொண்டையில் இருந்த குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் வைக்கப்பட்டது.

தொண்டையில் இருந்த குழாய் அகற்றப்பட்ட காரணத்தினால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கின. குறிப்பாக நேற்று இரவிலிருந்தே இந்த வதந்திகள் அதிகமாக தொடங்கின. இதனால் திமுக தொண்டர்களிடையே சிறு கலக்கமும், பதட்டமும் உருவானது.

அதற்கு ஸ்டாலின், “திமுக தலைவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதெல்லாம் வெறும் வதந்திதான். அவருக்கு சிறு காய்ச்சல் வந்துள்ளது. அதற்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனை யாரும் பெரிது படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.