புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > புத்ராஜெயாவில் 61ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்
முதன்மைச் செய்திகள்

புத்ராஜெயாவில் 61ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்

புத்ராஜெயா, ஜூலை 27
இவ்வாண்டிற்க்கான நாட்டின் சுதந்திர தின விழா புத்ராஜெயாவில் கொண்டாடப்படவுள்ளதாகவும் நம்பிக்கைக் கூட்டணியின் அரசாங்க மையமாக திகழும் புத்ராஜெயா இந்த விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்று தொடர்பு பல்லூடக துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீரே புத்ராஜெயாவை தேர்வு செய்ததாக அவர் கூறினார்.

இவ்வாண்டின் சுதந்திர தின விழா புதிய அரசாங்கத்திற்கு முழு வரலாற்றுப்பூர்வ சுதந்திர தினமாக அமையும். எனது மலேசியாவை நேசிப்போம் எனும் கருப்பொருளில் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. மலேசியர்களிடையே நாட்டை நேசிக்கும் உணர்வை மேலோங்கச் செய்வதற்கு இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

நாளை முதல் தேசிய கொடியை பறக்க விடுவதன் மூலம் மக்கள் தங்களின் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும் என புத்ராஜெயாவிலுள்ள தமது அமைச்சின் 2018 சுதந்திர தினத்திற்கான அதிகாரப்பூர்வ கீதத்தையும் சின்னத்தையும் அறிமுகம் செய்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடன் இதனை தெரிவித்தார்.

ஒரு இருதயத்தின் தோற்றத்தில் மக்கள் கைகளை உயர்த்தியபடி முன்னோக்கி நடந்து செல்லும் காட்சிஅதிகாரப்பூர்வ சுதந்திர தினத்தின் சின்னமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பல்லின மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் நாட்டை நேசிக்கும் உணர்வுடனும் வாழ்வதை பிரதிபலிப்பதாக இந்த சின்னம் அமைகிறது. நிக் ஜுல்கிப்லி நிக் ஹித்தாம் என்பவர் இந்த சின்னத்தை வடிவமைத்ததாகவும் கடந்த ஜூலை 25ஆம் தேதி இந்த சின்னத்தை தேர்வு செய்தார் எனவும் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன