திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > விரைவு பஸ் காரை மோதியது; 3 பேர் பலி
முதன்மைச் செய்திகள்

விரைவு பஸ் காரை மோதியது; 3 பேர் பலி

ஈப்போ, ஜூலை 29
வடக்கு நெடுஞ்சாலையில் 308.8ஆவது கிலோ மீட்டர் தொலைவில் விரைவு பஸ் ஒன்று காரை மோதியதில் அதில் பயணித்த 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்த விரைவு பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தீயணைப்பு மீட்புத் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

காலை இச்சம்பவத்தில் தொயோத்தா வியோஸ் காரில் பயணித்த 5 பேரில் 3 பேர் உயிரிழந்த வேலையில் 2 ஆடவர்களுக்குச் சொற்பக் காயங்களுடன் உயிர் தப்பினர். பஸ்சில் பயணித்த 16 பேருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

உயிரிழந்தவர்களின் உடல் சவப்பரிசோதனைக்காக கம்பார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. காயமடைந்தவர்களும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன