அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலாய்க்காரர்களை வந்தேறிகள் என்றேனா? -குலசேகரன் மறுப்பு
முதன்மைச் செய்திகள்

மலாய்க்காரர்களை வந்தேறிகள் என்றேனா? -குலசேகரன் மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை 29-
மலாய்க்காரர்கள் வந்தேறிகள் என்றும் இந்தியர்களே இந்நாட்டின் மைந்தர்கள் என்று தாம் கூறியதாக வெளியான தகவலை மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் மறுத்தார்.

தனது அறிக்கையின் உண்மையான உள்ளடகத்தைப் புறக்கணித்துவிட்டு சில தரப்பினர் அதனை வேண்டுமென்றே திரித்துக் கூறியிருப்பதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் குறிப்பிட்டார்.

இன விவகாரத்தை பெரிதுபடுத்துவதற்காக தம்மீது வேண்டுமென்றே பரப்பப்பட்ட அவதூறே இது என்றார் அமைச்சர்.

நீலாய், நெகிரி செம்பிலானில் கடந்த வாரம் இந்து சமய நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்து கொண்டேன். நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதால் தனி நபர் அல்லது ஓர் இனத்தைச் சாடுவது கூடாது என்று கருத்துரைத்தேன்”.

அந்தத் தமிழ் நிகழ்ச்சியில் மலாய்க்காரர்களைப் பற்றி நான் பேசவே இல்லை. ஆகையால், மலாய்க்காரர்களை வந்தேறிகள் என்று நான் வருணித்ததாகக் கூறப்படுவது சுத்தமான பொய்” என்றார்.

இந்தியர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மலாயாவில் உள்ளனர். இவர்களே இந்து சமயத்தை மலாயாவுக்குக் கொண்டு வந்தனர். பூஜாங் பள்ளத்தாக்கு பகுதி குறிப்பாக கெடாவில் காணப்பட்ட சுங்கை பத்து இதற்குச் சான்று”.

மலாய்க்காரர்கள் வந்தேறிகள் என்றும் இந்தியர்களே இந்நாட்டின் மைந்தர்கள் என்றும் தாம் கூறியதாக வெளியான தகவலுக்கு எதிராக தனது முகநூல் வழி விளக்கம் அளித்தார் குலசேகரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன