சென்னை, ஜூலை 29
திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிழல்படம் முதல் முறையாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு காவிரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை பார்த்துள்ளார். பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்து வருகின்றனர்.

கருணாநிதி செயற்கை சுவாசம் எனப்படும் வெண்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள நிழல்படம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தப் நிழல்படத்தில் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும், கருணாநிதியின் அருகே வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கருவிகளை பார்த்தால், அவர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிகிறது.

அதே நேரம், முகத்தில் சுவாசக் கவசம் அணியாமல், இத்தனை பேரும் அவசர சிகிச்சை வார்டுக்குள் சென்றது தவறான செயல் என்று மருத்து நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.