புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பலாக்கோங் இடைத்தேர்தல் : தேர்தல் பரப்புரைக்கு 21 நாட்கள்!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பலாக்கோங் இடைத்தேர்தல் : தேர்தல் பரப்புரைக்கு 21 நாட்கள்!

கோலாலம்பூர், ஜூலை 30-

பலாக்கோங் சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 நாட்கள் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 18ஆம் தேதி பலாக்கோங் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் உலு லாங்காட் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறும். பின்னர் வேட்பாளர்கள் 21 நாட்கள் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளலாம். செப்டம்பர் 8ஆம் தேதி இத்தொகுதிக்கான வாக்குப்பதிவும் நடைபெறுமென தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டான்ஶ்ரீ ஒத்மான் மாமுட் கூறினார்.

இடைத்தேர்தலில் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பரப்புரைக்கு 21 நாட்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக தேர்தல் பரப்புரைகளுக்கு 21 நாட்கள் வழங்க வேண்டுமென பெர்சே அமைப்பு வலியுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிகேஆரின் எங் தியேன் சீ கடந்த ஜூலை 20ஆம் தேதி சாலை விபத்தில் மரணமடைந்ததால், பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி காலியானது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் 2ஆவது இடைத்தேர்தலாக இது விளங்குகின்றது.

14ஆவது பொதுத் தேர்தலின் போது, பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் லிம் சின் வாவையும் மற்றொரு வேட்பாளரான இப்ராஹிம் கஸாலிவை 35,538 வாக்குகள் வித்தியாசத்தில் எங் தியேன் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன