கோலாலம்பூர், ஜூலை 30
அதிகரித்து வரும் கை, கால், வாய்ப்புண் நோய்யை தடுக்க பொது மக்கள் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் வலியுறுத்தினார்.

இந்த நோயினால் கடந்த வாரம் ஏற்பட்ட முதல் மரணச் சம்பவத்தைத் தொடர்ந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

சொந்த, சுற்றுச்சூழல் பராமரித்தல், நோய் வாய்ப்பட்ட சிறார்களைத் தனிமைப்படுத்துதல், உணவு உண்பதற்கு முன் மற்றும் உண்ட பிறகு கைகளை நன்றாகக் கழுவுதல் உட்பட அமைச்சு பரிந்துரைக்கும் சில வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நோய்க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஸுல்கிப்ளி இவ்வாறு குறிப்பிட்டார்.