புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பொன்னபலத்தை குறிவைத்த கமல்ஹாசன் மும்தாஜையும் ஐஸ்வர்யாவை விட்டுவிட்டார்! ஆதங்கத்தில் பிக் பாஸ் ரசிகர்கள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பொன்னபலத்தை குறிவைத்த கமல்ஹாசன் மும்தாஜையும் ஐஸ்வர்யாவை விட்டுவிட்டார்! ஆதங்கத்தில் பிக் பாஸ் ரசிகர்கள்

சென்னை, ஜூலை 30-

தமிழ்நாட்டு கலாசாரம் என பொன்னம்பலம் அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் கூறிவருகிறார். அது குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். பெண்கள் எப்படிதான் இருக்க வேண்டுமென்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

தமிழ் கலாசாரம் பேசும் பொன்னபலத்திற்காக தனி குறும்படத்தையும் அவர் வெளியிட்டார். அதில் பொன்னம்பலம் யாஷிகா மடியில் அமர்ந்தது, ரித்விகாவை உதைக்க சென்றது போன்ற காட்சிகளை ஒளிபரப்பி, இப்போது தமிழ் கலாசாரம் என்னவானது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

ஆனால் மும்தாஜ் விவகாரத்தில் இது போன்ற எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த வாரம் முழுவதுவும் மும்தாஜ், சென்ராயனுடன் இணைந்து சமையல் செய்ய வேண்டுமென்றும் கமல்ஹாசன் பணித்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவில்லை. அவர் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

சில வாரங்கள் அந்த அறையில் இருக்கும் அவர், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார். கடந்த பிக் பாஸ் போட்டியில் இந்த வாய்ப்பு சுஜாவிற்கு வழங்கப்பட்டது.

இந்த வார பிக் பாஸ் வீட்டில் பாலாஜிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் சண்டை நடக்கின்றது. அதேபோல் சென்ராயனும் மும்தாஜ்க்கும் மோதல் வெடிக்கத் தொடங்கி விட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன