சனிக்கிழமை, மே 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் போட்டி: ரொக்கப்பரிசு 5000!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் போட்டி: ரொக்கப்பரிசு 5000!

கோலாலம்பூர், ஜூலை 31

விளையாட்டுத்துறையில் இந்திய மாணவர்கள் சாதிப்பதை உறுதிப்படுத்த போட்டி விளையாட்டுக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷிகரன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் சமூக கடப்பாடு தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்த அடைநிலையை பதிவு செய்வதோடு அவ்விளையாட்டு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என 3ஆவது ஆண்டாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நடத்துவது அதன் சமூக கடப்பாடை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாக சிறந்த அடைவுநிலையை பதிவு செய்து வருகிறார்கள். கல்வியில் மற்றவர்களுக்கு சவால் விடும் ஆற்றலை கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் சாதிப்பது அவசியமாக கருதப்படுகின்றது. அந்த அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு புறப்பாட நடவடிக்கை அத்தியாவசியமானது என்பதையும் ராஜிவ் ரிஷிகரன் வலியுறுத்தினார்.

இதனிடையே, ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நடத்தும் பேட்மிண்டன் போட்டியின் மூலம் இளம் தலைமுறையில் சிறந்த ஆட்டக்காரரை அடையாளம் காண முடிகின்றது. வருங்காலத்தில் இவர்கள் மலேசிய ஆட்டக்காரர்களாக உருமாறவும் வாய்ப்புள்ளதாக தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்த போட்டியை நடத்துவது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டித்தன்மையை உருவாக்கினால் சிறந்தவர்களை நம்மால் அடையாளம் காண முடியும் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

மாணவர்கள் விளையாட்டுத்துறையின் மீது ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். விளையாட்டுத் துறை என்பது ஒருவரை பொருளாதார ரீதியிலும் உயர்த்தும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, பேட்மிண்டன் என்பது தனிநபர் திறமையை வெளிப்படுத்தும் போட்டி இதில் யார் சிறந்தவரோ அவர்தான் முதலிடத்தை பிடிப்பார். இதில் அரசியலுக்கு இடம் இல்லை என்பதையும் அனைவரும் உணர வேண்டும் என சுரேன் கந்தா கேட்டுக் கொண்டார்.

டிசம்பர் 13ஆம் தேதி ஜோகூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கான மாநில போட்டியில் நடைபெறும். அக்டோபர் 20ஆம் தேதி பகாங், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களுக்கான போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி அக்டோபர் 27ஆம் தேதி செந்தோசா, ஸ்டேடியம் ஸ்போர்ட் அரெனாவில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் தமிழ்ப்பள்ளிக்கு 5,000 வெள்ளி ரொக்கப் பரிசும் வழங்கப்படும். 2ஆம் நிலை வெற்றியாளருக்கு 3,000 வெள்ளியும், 3ஆம் நிலை வெற்றியாளருக்கு 1,500 வெள்ளியும் பரிசாக வழங்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன