புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பாயேர்ன் மூனிக்கை விட்டு வெளியேற துடிக்கிறார் லெவென்டோஸ்கி !
விளையாட்டு

பாயேர்ன் மூனிக்கை விட்டு வெளியேற துடிக்கிறார் லெவென்டோஸ்கி !

மூனிக், ஆக.1 –

ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக் கிளப்பை விட்டு வெளியேற அதன் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் ரோபேர்ட் லெவென்டோஸ்கி, துடித்து கொண்டிருப்பதாக பயிற்றுனர் நிக்கோ கோவாக் தெரிவித்துள்ளார். எனினும் அந்த ஆட்டக்காரரை தற்போது விற்பதற்கு பாயேர்ன் மூனிக் எண்ணம் கொண்டிருக்கவில்லை என நிக்கோ கோவாக் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில்,  மூன்று முறை ஜெர்மனி பண்டேஸ்லீகா கால்பந்துப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரராக லெவென்டோஸ்கி விளங்கிறார்.2014 ஆம் ஆண்டில்  பாயேர்ன் மூனிக் கிளப்பில் இணைந்த லெவென்டோஸ்கி கடந்த மூன்று பருவங்களில் தலா 40 கோல்களைப் போட்டுள்ளார்.

இதன் மூலம் , நான்கு ஆண்டுகளாக பாயேர்ன் மூனிக் தொடர்ச்சியாக பண்டேஸ்லீகா கிண்ணத்தை வென்றுள்ளது. பாயேர்ன் மூனிக்கில் இருந்து வெளியேறி மற்றொரு கிளப்பில் இணைய லெவென்டோஸ்கி ஆர்வமாக இருக்கிறார். ஆனால் அவரை விட்டுக் கொடுக்க தமது கிளப் தயாராக இல்லை என நிக்கோ கோவாக் தெரிவித்துள்ளார்.

லெவென்டோஸ்கியின் எண்ணத்திற்கு எதிராக பாயேர்ன் மூனிக் செயல்பட்டாலும், தமது கிளப்புக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என நிக்கோ கோவாக் திடமாக நம்புகிறார். லெவென்டோஸ்கி ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பதால் அவர் பாயேர்ன் மூனிக்கில் தனது திறமையைத் தொடர்ந்து நிரூபிப்பார் என்று நிக்கோ கோவாக் மேலும் தெரிவித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன