புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ரொனால்டோவின் இடத்தை பேல் நிரப்புவார் !
விளையாட்டு

ரொனால்டோவின் இடத்தை பேல் நிரப்புவார் !

மாட்ரிட், ஆக.1 –

ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து உலகின் சிறந்த ஆட்டக்காரரான போர்ச்சுகலின் ரொனால்டோ வெளியேறினாலும், வேல்சின் கேரத் பேல் அவரின் இடத்தை நிரப்புவார் என அந்த கிளப்பின் புதிய பயிற்றுனர் ஜூலன் லொப்பேதேகுவே தெரிவித்துள்ளார். 33 வயதுடைய ரொனால்டோ கடந்த மாதம் ரியல் மாட்ரிட்டில் இருந்து வெளியேறி இத்தாலியின் யுவன்டசில் இணைந்தார்.

கடந்த பருவத்தில் ரியல் மாட்ரிட் கிளப்பின் முதன்மை அணியில் இடம் பிடிக்க கேரத் பேல் போராடினார். எனினும் லிவர்பூல் கிளப்புக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேரத் பேல் ஒரு கோலைப் போட்டு தனது ஆற்றலை நிரூபித்தார்.

ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து ரொனால்டோ வெளியேறி இருப்பதன் மூலம், பேலுக்கு தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை அவர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார் என தாம் எதிர்பார்ப்பதாக லொப்பேதேகுவே தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன