புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த தல அஜித்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த தல அஜித்

சென்னை, ஆக 2-

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து நடிகர் அஜித் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் கடந்து சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்குச் சென்று மு.க.ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘விசுவாசம்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித், நேற்று இரவு காவிரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார். அந்தப் புகைப்படத்தை தற்போது அஜித்தின் ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் விஜய் நேற்று காலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன