சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சீனிக்கான விலை மறுஆய்வு
முதன்மைச் செய்திகள்

சீனிக்கான விலை மறுஆய்வு

கோலாலம்பூர், ஆக.2
மக்களின் சுமையைக் குறைக்க அரசு சீனி விலையை அரசு மறுஆய்வு செய்யும்.

சீனி விலையைக் குறைக்கும் சிறந்த வழிமுறைகளை ஆராய்வதில் அரசு முனைப்புக் காட்டி வருகிறது என உள்நாட்டு வர்த்தகப் பயனீட்டாளர் நலத்துறைத் துணை அமைச்சர் சோங் சியெங் ஜென் தெரிவித்தார்.

இறக்குமதி பெர்மிட் வழங்குவது தொடர்பான விஷயங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

உலகச் சந்தையில் சுத்திகரிப்பு செய்யப்படாத சீனி விலை அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நிர்வாகம், சுத்திகரிப்பு ஆலை நடவடிக்கை, போக்குவரத்து, மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், போன்ற பல்வேறு செலவுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

பல்வேறு செலவுகள் சம்பந்தப்பட்டிருக்கும் காரணத்தினால் வெள்ளை சீனிவிலை கிலோவுக்கு 1.50ஆகக் குறைப்பது சாத்தியம்தான். ஆசியாவிலேயே மலேசியாவில்தான் சீனி விலை மிகக் குறைவாக உள்ளது. மொத்தமாக உள்ள வெள்ளைச் சீனியின் விலை கிலோவுக்கு வெ.2.95 ஆகும். தூள் வெள்ளை சீனி கிலோவுக்கு 3.05 ஆகும்.

கடந்த 2017 மார்ச் 1ஆம் தேதி இந்த விலை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தோனேசியாவில் ஒருகிலோ சீனி விலை வெ.3.58 ஆகும். வியட்னாமில் வெ.4.41, சிங்கப்பூரில் வெ.4.65

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன