புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > நான் இருந்திருந்தால் நடத்திருப்பதே வேற – பாலாஜி மனைவி நித்தியா!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நான் இருந்திருந்தால் நடத்திருப்பதே வேற – பாலாஜி மனைவி நித்தியா!

பிக்பாஸ் வீட்டில் தரப்பட்டுள்ள ராணி மகாராணி டாஸ்க்கில் ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பையை எடுத்து கொட்டியதால் தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். ஒரு வீட்டுப் பிரச்சனை இப்போது இனப்பிரச்சனையைக் கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில், பாலாஜியின் மனைவி நித்தியா இது குறுத்து, கடுங்கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.  தான் உள்ளே இருந்திருந்தால், நிச்சயம் சண்டை பெரியதாக இருந்திருக்கும் என்று நித்தியா வீடியோ ஒன்றில் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

பாலாஜி என்னதான் பேசி இருந்தாலும், அதற்கு இது சரியான தண்டனையோ பதிலடியோ அல்ல. இப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கு தாம் அனுமத்திருக்க மாட்டேன் என்றும் உறுதியாக கூறுகிறார்.

பாலாஜி பேசியதில்  20 விழுக்காடு மட்டுமே தவறு என்று கூறுவேன். ஆனால், ஒரு வீட்டுத் தலைவியாக, மகாராணியாக, பெண்ணாக, இருக்கும் ஒருவர் சக மனிதரை மனிதாபிமானம் இல்லாமல் இப்படி நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என நித்தியா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலாஜியை வெளியில் அழைத்துவர தாம் கிளம்பியதை தமது நண்பர்கள் தடுத்துவிட்டதாக கூறிய நித்தியா, அத்தனை கோபக்காரரான பாலாஜி அப்படி ஒரு சூழலில் தனது தன்மையை இழந்து விடாமல் பொறுமை காத்து நின்றது தமக்கு பெருமையை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், வீட்டில், பெரியவராக இருக்கும் பொன்னம்பலம்  இதனை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்காதது தன்னை சற்று வேதனை அடைய வைத்துள்ளதகாவும் நித்தியா கூறியுள்ளார். சென்ராயன், மஹத், ரித்விகா போன்றவர்களை ஐஸ்வர்யா நடத்திய விதமும் சரியில்லை என்று நித்தியா சாடினார்.

மற்றொரு நிலவரத்தில், பிக்பாஸ் இப்படி ஒரு நிலையை தம் மகனுக்கு வரவிட்டதை நினைத்து கண்கலங்கி இருக்கிறார் பாலாஜியின் தாயார்.

இந்நிலையில் இரவு ஜனனியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஏன் இப்படி செய்தார் என பேசியுள்ளார். ஐஸ்வர்யாவின் அம்மா பற்றி பாலாஜி எதோ கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டாராம், அதனால் தான் அவரை இப்படி அசிங்கப்படுத்தினேன் என ஐஸ்வர்யா கண்கலங்கி கூறியுள்ளார்.

ஆனால், அதில் முழு உண்மை இல்லை என்பது மொழி புரிந்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று இன்னும் சிலர் பாலாஜிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆதரவு சனிக்கிழமை கமலிடம் இருந்தும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன