வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஆகஸ்ட் 15இல் வாழ்க்கை செலவின உதவித் தொகை
முதன்மைச் செய்திகள்

ஆகஸ்ட் 15இல் வாழ்க்கை செலவின உதவித் தொகை

கோலாலம்பூர், ஆக 3

சுமார் 160 கோடி ஒதுக்கிட்டின் கீழ் 41 லட்சம் பேர் பிஎஸ்எச் எனப்படும் வாழ்க்கை செலவின உதவித் தொகை ஆகஸ்ட் 15ஆம் தேதி பெறுவார்கள் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

3ஆம் கட்டமாக வழங்கப்படும் இந்த உதவித் தொகை எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் ஹஜ் பெருநாளுக்கு உதவியாக இருக்கும் என அவர் கூறினார்.

குறிப்பிட்ட தேதியில் இந்த உதவித் தொகையை பெறுவோரின் வங்கிக் கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படும். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு இந்த உதவித் தொகை பெறுவதற்கான அங்கீகார கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அவர்கள் பிஎஸ்என் வங்கியில் அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அவர் சொன்னார்.

நாடு திவாலாகிவிட்டது என சில தரப்பினர் கூறிய குற்றச்சாட்டிற்கும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி இல்லாமல் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதற்கும் இது சிறந்த சான்றாகும் என லிம் குவாங் எங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாண்டு இறுதி வரை ரோன்95 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு வெ.2.20 மற்றும் வெ.2.18ஆக நிலை நிறுத்த 300 கோடி வெள்ளி பெட்ரோல் உதவித் தொகை தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன