திங்கட்கிழமை, அக்டோபர் 22, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > புதிய பரிணாமத்துடன் ஆஸ்ட்ரோவின் ‘சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டி
கலை உலகம்

புதிய பரிணாமத்துடன் ஆஸ்ட்ரோவின் ‘சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டி

கோலாலம்பூர், ஆக 3
மலேசிய இரசிகர்களைக் கவர்ந்திழுத்த ‘சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியின் புதிய சீசன் நாளை 4ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் ஒளியேறவுள்ளது.

இந்நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்திலும் கண்டு களிக்கலாம். அதை வேளையில், ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் பாடும் பாடல்களைப் பிரத்தியேகமாக ராக்கு அதிகாரப்பூர்வ அகப்பக்கம் raku.my அல்லது அதன் செயலி கேட்டு மகிழலாம்.

கடந்த ஜூன் மாதம் நாடு தழுவிய நான்கு இடங்களில் நடைபெற்ற இப்போட்டியின் குரல் தேர்வில் தேர்தெடுக்கப்பட்ட 38 போட்டியாளர்கள் ‘சூப்பர்ஸ்டார் 2018 வெற்றி மகுடத்தை வெல்ல களமிறங்குகின்றார்கள்.

11 வாரங்களுக்கு மிகக் கடுமையாக நடைபெறவுள்ள இந்த இசைப் போரில் முதல் வாரம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி 8 போட்டியாளர்கள் பாடுவார்கள். அவற்றுள் அதிகமான புள்ளிகள் பெற்று ‘five stars இடத்தைப் பிடிக்கும் 5 போட்டியாளர்கள் மட்டுமே அடுத்த வாரத்திற்கான போட்டியில் களமிறங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

‘Five stars இடத்தைப் பிடித்த அந்த 5 போட்டியாளர்கள் இரண்டாம் வாரம் 3 புதிய போட்டியாளர்களுடன் போட்டியிடுவார்கள். சுமார் 11 வாரங்களுக்கு இதைப் போன்று இப்போட்டி நடைபெறவுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் ‘சூப்பர்ஸ்டார் 2018 இறுதிச் சுற்றில் 5 போட்டியாளர்கள் களமிறங்குவார்கள். போட்டியாளர்கள் இந்த மாபெரும் இசைப் போரில் மொத்தம் ரிம 100,000 ரொக்கப் பரிசு தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.

இப்போட்டியின் நிரந்தர நீதிபதியாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பணியாற்றவுள்ளார். இவருடன் ஒவ்வொரு வாரமும் ஒரு உள்ளூர் இசையமையாளர்/பாடகர் மற்றும் வெளியூர் பிண்ணனி பாடகர்கள் நீதிபதிகளாக வலம் வருவார்கள். அவர்களுள் ரிதா, ராபிட் மேக், ராகுல் நம்பியார், ஷீலா ராமன், மாதாங்கி, சத்தியன், மற்றும் ரேணுகா ஸ்ரீ ஆகியோர் அடங்குவார்கள்.

அதை வேளையில், பிரபலமான நகைச்சுவை நடிகர் சதீஷ், டத்தோ ஸ்ரீ விடா, கோ கார்ட் மஞ்சித், டார்கி, தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பலர் இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

புகழ்பெற்ற தொலைக்காட்சி அறிவிப்பாளர் குமரேஷ், ‘விழுதுகள் ரேவதி மற்றும் நெவாஷன் கணேசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்கள்.

12-வது வாரத்தில் சூப்பர்ஸ்டார் போட்டியின் முன்னாள் வெற்றியாளர்களின் படைப்புகள் ரீயூனியன் கலைநிகழ்ச்சியில் இடைபெறும்.

‘சூப்பர்ஸ்டார் 2018 போட்டியின் முதன்மை ஆதரவாளர் ‘போ, இணை ஆதரவாளர் ‘மலிண்டோ ஏர் விமான சேவை நிறுவனம் மற்றும் ராகா அதிகாரப்பூர்வ வானொலி நிலையமாகும்.

‘சூப்பர்ஸ்டார் குறித்த மேல் விவரங்கள் astroulagam.com.my/MYsuperstar வலம் வருங்கள்.

ஆஸ்ட்ரோ தமிழ் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக ‘சூப்பர்ஸ்டார் போட்டி திறமை வாய்ந்த மலேசியர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேன்மேலும் வளர ஒரு சிறந்த தளமாக இருந்து வந்துள்ளதுள்ளது. இப்போட்டி பல திறமையான பாடகர்களை உருவாக்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது. சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி என்பது வேறும் பாடல் போட்டி மட்டுமல்ல. நம் நாட்டின் கலைஞர்களைத் தங்களுடைய திறமைகளை வெளிகோணர ஒரு சிறந்த தளமாகும், என்றார்.

முதல் நிலை வெற்றியாளருக்கு வெ.50,000, இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு வெ.25,000, 3 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வெ.15,000, மிக பிரபலமான போட்டியாளருக்கு வெ10,000 வழங்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன