சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஆசியாவின் சிறந்த படம் மெர்சல்: சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு!
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆசியாவின் சிறந்த படம் மெர்சல்: சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு!

‘மெர்சல்’ படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது. இந்த மகத்தான சாதனையை தளபதி ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். MERSAL DECLARED ASIAS BEST என்ற ஹெஸ்டெக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. மலேசியாவிலும் இது மிகப் பெரிய வெற்றி படமாகியது.

இந்த படம் வெளிவந்த போது. பல்வேறான சர்ச்சைகள் எழுந்தன. இருந்தாலும் ரூ. 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘மெர்சல்’ படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹேமா ருக்மணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன