புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > 5 லட்சத்தை தாண்டியது வெடி குண்டு பசங்க!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

5 லட்சத்தை தாண்டியது வெடி குண்டு பசங்க!

கோலாலம்பூர், ஆக. 4-

மலேசியாவின் முன்னணி கலைஞரான டெனிஸ் குமாரின் வெடி குண்டு பசங்க திரைப்படம் 5 லட்சம் வெள்ளியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு மலேசிய ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

தரமான மலேசியத் திரைப்படங்களுக்கு மலேசியர்கள் எப்போதும் ஆதரவு வழங்குவார்கள் என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது.

ஜூலை 26ஆம் தேதி வெளியீடு கண்ட இத்திரைப்படம் மலேசிய ரசிகர்களிடையே மகத்தான ஆதரவை பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதோடு சிறந்த ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளது.

விமலா பெருமாள் இயக்கத்தில் இந்த திரைப்படமும் வெற்றி படமாக மாறியுள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரையில் மைந்தன், மயங்காதே, கீதையின் ராதை, அப்பளம் ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்து வெடி குண்டு பசங்க திரைப்படமும் 5 லட்சம் வெள்ளியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

குறிப்பாக தற்போது, விஜய் சேதுபதியின் ஜூங்கா, ஆர்யாவின் கஜினிகாந்த், திரிஷாவின் மோகினி ஆகிய திரைப்படங்களுடன் மலேசிய திரைப்படமான வெடி குண்டு பசங்க படமும் வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன