வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சுங்கை கண்டீஸ் தொகுதியை பிகேஆர் தற்காத்துக் கொண்டது
அரசியல்முதன்மைச் செய்திகள்

சுங்கை கண்டீஸ் தொகுதியை பிகேஆர் தற்காத்துக் கொண்டது

ஷா ஆலாம், ஆக. 4 
இன்று நடைபெற்ற சுங்கை கண்டீஸ் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிகேஆர் வெற்றிப் பெற்றது.
இரவு 8.30 வரை எண்ணப்பட்ட வாக்குகளில் பிகேஆர் வேட்பாளர் முகமட் ஸவாவி முக்னி 13,984 வாக்குகளை பெற்றதைத் தொடர்ந்து அவர் வெற்றிப் பெற்றார்.
தேசிய முன்னணி வேட்பாளரான அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் அடாம்  7,774 வாக்குகளையும் சுயேட்சை வேட்பாளர் மூர்த்தி கிருஷ்ணசாமி 87 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டனர். இந்த இடைத்தேர்தலில் 50 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர்.
இத்தொகுதியில் 51,217 தகுதி பெற்ற வாக்காளர்களில் 25,765 பேர் மட்டுமே இன்று வாக்களித்ததாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை கண்டீஸ் சட்டமன்ற தொகுதியில் பிகேஆர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான மாட் சுஹாய்மி 12,480 வாக்குகளை பெற்று தேசிய முன்னணி, பாஸ் மற்றும் பிஎஸ்எம் வேட்பாளர்களை தோற்கடித்தார்.
கடந்த ஜூலை 2ஆம் தேதி மாட் சுஹாய்மி ஷாபி புற்றுநோயால் காலமானதை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன