புதன்கிழமை, டிசம்பர் 11, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ப்ரோமோவை பார்த்து ஏமார்ந்துவிட்டோம் கமல்..! – மக்கள்..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ப்ரோமோவை பார்த்து ஏமார்ந்துவிட்டோம் கமல்..! – மக்கள்..!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள்  மிகவும் மோசமான வார்த்தைகளை பேசி வருவதுடன் கடந்த வாரத்தில், ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதமும், செயலும் பிக்பாஸ் ரசிகர்களை கடுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

பரவாயில்லை, இதற்கு எப்படியும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகரும் , தற்போது அரசியல் தலைவராகவும் உருவாகி இருக்கும் கமல்ஹாசன் நடந்த குற்றங்களுக்கு சரியான சவுக்கடி கொடுப்பார் என்று மக்கள் சனிக்கிழமைக்காக பெரிதும் காத்திருந்தனர்.

இதில் குறிப்பாக ஐஸ்வர்யா தவறான வார்த்தைகளைப் பேச, இதை கமல் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என்று  ரசிகர்கள் கூறினார்கள். இன்னும் சொல்ல போனால், இது குறித்து அவர் வாய் திறப்பாறா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இந்த காத்திருப்புக்கு தீனி கிடைத்தது போல் இருந்தது, கோர்ட்டை   கழற்றி வீசும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அந்த அதிரடி ப்ரோமோ. ( கமல் செய்ததை இந்தி பிக் பாஸில் சல்மான்கான் ஏற்கெனவே செய்துவிட்டதாக சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்பது இன்னும் புலப்படவில்லை)

அந்த ப்ரோமோவை ரிப்பிட்டில் வைத்து திரும்ப திரும்ப பார்க்காதவர்கள் நிச்சயம் இருந்திருக்க முடியாது. அப்படி இருக்க அதன் எதிர்பார்ப்பு எகிறிதான் போயிருந்தது.  தொடக்கமெல்லாம் அருமையாகதான் இருந்தது, ஆனால் முடிவில் தான் பெரும் சறுக்கல் நிறைந்திருந்தது.

தமக்கே உரிய பாணியில்  கோபமும் நக்கல்  நிறைந்த பேச்சால்,  சில இடங்களில் நெற்றிப் பொட்டில் அறைந்தார் கமல். கெட்ட வார்த்தைகளில் வீட்டில் உள்ளவர்கள் பேசுவதையும் கோடி காட்டி  தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.  அதில் வழக்கம் போல அரசியல் பேச்சுகளையும் இணைத்துக்கொண்டார். ஹிந்திக்கும் தன்னை பிடிக்கும் என்பதை நாசுக்காக அடித்தார்.  சர்வாதிகாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர, ஒரு பெண்ணை பொன்னம்பலம் அப்படி செய்திருக்க கூடாது என்பதையும் குறிப்பிட்டு கூறினார். வீட்டில் நடந்திருக்கும் ஒரு சம்பவத்தை அனைவரும் தடுத்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையெல்லாம் பேசிய அவர் மெயின் மேட்டருக்கே வரவில்லை என்பதே தற்போது மக்களின் ஆதங்கமாக கிளம்பி இருக்கிறது. பெண்ணுக்காக் பேசிய அவர், குப்பை கொட்டியது மனிதாபிமானமற்ற செயல் என்பதால், அதனை பாலாஜி எப்படி ஏற்றிக்கொண்டா? அவரது உணர்வுகள் எப்படி இருந்தது? பாலாஜி உங்கள் தரப்பின் வாதம் என்ன? ஐஸ்வரியா நீங்கள் செய்தது சரியா? உங்களை விட வயதில் மூத்தவர்களிடம் நடந்து கொள்ளும் முறை இதானா? இப்படி எத்தனையோ தவறுகளை கமல் சுட்டிக் காட்டாமல் விட்டுவிட்டார்.

கெட்ட வார்த்தைப் பேசிய பாலாஜியிடம், பழித் தீர்த்துக்கொள்ள ஐஸ்வரியா நடந்து கொண்ட விதத்தை கமல் அத்தனை ஆழமாக பேசவில்லை. அதுபோல, ரித்விகாவை ”ச்சேரி” என்று பேசியது குறித்தும் ஒரு குறும்படத்தை போட்டு, அவருக்கு மட்டுமில்லாமல் அனைவருக்குமே பாடம் கற்பித்திருக்கலாம்.

இங்கு பாலாஜிக்கு மக்கள் பரிந்து பேசவில்லை,  ஆனால் ஏற்கனவே, அவமானத்தில் தலை குனிந்த  பாலாஜிக்கு மேலும்  போடப்பட்ட ‘குறும்படம்’ வலிந்து திணிக்கப்பட்டிருகிறது.  இது பார்வையில், ஐஸ்வரியாவை திட்டியதற்காக சமன் செய்யும் முறையில் பாலாஜியை பலிகடாவாக்கியது போல இருந்தது.  பசிக்கு சாப்பிட்டதை பெரிய ‘குற்றமாக’ அம்பலப்படுத்தியிருக்க வேண்டாம்.

அங்கு போட்டுக்காட்ட வேண்டிய குறும்படங்கள் எவ்வளவோ இருக்கு,  ஐஸ்வரியா கோபத்தில் நடந்து கொண்ட விதமும், பழி தீர்ப்பதில் ஒரு மனிதனின்  குணம் எத்தனை மோசமானதாக தன்னை அறியாமல் மாறுகிறது என்பதை ஒரு பாடமாக  போட்டுக் காட்டி இருக்கலாம். இது கூட ஒரு மகளை திருத்தும் முறைதான் கமல் சார்..!

வேகமாக தொடங்கிய கமல், பின்னர் ஐஸ்வர்யாவின் கண்ணீரை பார்த்தும் அப்படியே அமிழ்ந்து போனது பார்ப்பவர்களை நிச்சயம் எரிச்சல் அடையவே செய்தது என்பதை மறுப்பதிற்கில்லை.

இரண்டும் பக்கமும் இருந்த தவறை சரியாக ‘குட்டு’ வைத்து காட்டி இருந்தால், உங்களுக்கு மக்களிடம் ‘குட்’ கிடைத்திருக்கும் கமல் சார்… ஆனாலும் இப்போது நிலமை வேறு விதமாகி இருக்கிறது. மீம்ஸும் டிவீட்டரும் தொடர்ந்து நியாத்திற்காக உங்களை வசைப்பாடிக்கொண்டிருக்கின்றன.

 

 

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன