சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று சாதித்தார் ஸ்ரீ அபிராமி!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று சாதித்தார் ஸ்ரீ அபிராமி!

பேங்காக், ஆக. 5-

ஆசிய ஸ்கெட் ( பனித் தரையில் நடமாடும் சாகச போட்டி) சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீ அபிராமி (வயது 6) தங்கப்பதக்கம் வென்று அதிரடி சாதனை படைத்துள்ளார். அவரை பாராட்டி ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற சமூக தளங்களில் வாழ்த்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் முதல் பிரிவில் தங்கம் வென்று ஸ்ரீ அபிராமி சாதனை படைத்துள்ளார். உலகளாவிய நிலையில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஸ்கேட் போட்டியில் தங்கம் வென்ற முதல் மலேசியராகவும் இவர் விளங்குகின்றார்.

பேங்காக் தி ரிங் அரெனாவில் நடக்கும் ஸ்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கு கொள்கிறார்கள். பல பிரிவுகளில் இப்போட்டி நடைபெறுகின்றது.

இந்த மகத்தான வெற்றியை மலேசியாவின் 7ஆவது பிரதமரான துன் டாக்டர் மகாதீருக்கு சமர்ப்பிப்பதாக ஸ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். அதோடு சிலாங்கூர் மந்திரி புசார் உட்பட ஸ்ரீஅபிராமியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இம்மாதிரியான விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்பது அரிதுதான். இந்த விளையாட்டின் நுணுக்கங்களை அறிந்து கொண்டு உலகளாவிய போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற ஸ்ரீ அபிராமியை சமூக தலைவர்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன