செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பிக் பாஸ் : இவர்தான் வெளியேறினார்? கதறி அழும் ஐஸ்வர்யா யாஷிகா
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிக் பாஸ் : இவர்தான் வெளியேறினார்? கதறி அழும் ஐஸ்வர்யா யாஷிகா

சென்னை, ஆக. 5-

பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும், ரசிகர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் போட்டியிலிருந்து யார் வெளியேறுவார் என கேள்வி பலமாக எழுந்த நிலையில், ஷாரிக்தான் வெளியேறியுள்ளார்.

ஷாரிக் வெளியேறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது நெருங்கிய தோழிகளான ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் கதறி அழுகிறார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார். இதுவரையில் மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, ரம்யா ஆகியோர் போட்டியிலிருந்து வெளியாகியுள்ளார்கள்.

கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட வைஷ்ணவி மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து ஷாரிக் வெளியேறியுள்ளார். ஆரம்பத்தில் பொன்னம்பலத்துடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது.

யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் இவர் நெருங்கிப் பழகியதால், வீட்டிலும் சில சர்ச்சைகள் வெடித்தன. ஆனால் பிக் பாஸ் வழங்கும் டாஸ்களை இவர் சிறப்பாக செய்து வந்தார். இந்த வாரமும் பொன்னம்பலம், மும்தாஜ், மஹத், பாலாஜி ஆகியோர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹத்தான் வெளியேற்றப்பட்டார் என்பதுபோல புரோமோ இருந்தாலும், ஷாரிக் ஹாசன்தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் ஷாரிக்கின் பெற்றோரும் கலந்து கொள்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன