செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிகேஆர் தலைவர் பதவிக்கு அன்வார் வேட்புமனுத் தாக்கல்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிகேஆர் தலைவர் பதவிக்கு அன்வார் வேட்புமனுத் தாக்கல்

கோலாலம்பூர், ஆக. 5 –
பிகேஆர் கட்சி அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு ஆன நிலையில் அதன் தலைவர் பதவிக்குப் போட்டியிட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

பிகேஆர் தலைவர் பதவிப் போட்டியில் அன்வாரின் வேட்புமனுவைக் கட்சியின் வியூகப் பிரிவு இயக்குநர் சிம் ஸெ ஸின் இன்று காலை 11.15 மணியளவில் கட்சித் தலைமையகத்தில் தாக்கல் செய்தார்.

பிகேஆர் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தலைவர் பதவிக்கு இதுவரையில் அன்வார் மட்டுமே வேட்புமனுவைத் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன