சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசியக் கிண்ணம் : ஜே.டி.தியை பந்தாடியது மிஃபா! அதிர்ந்தது அரங்கம்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசியக் கிண்ணம் : ஜே.டி.தியை பந்தாடியது மிஃபா! அதிர்ந்தது அரங்கம்

ஜொகூர்பாரு, ஆக. 6-

மலேசியக்கிண்ண போட்டியில் முதன் முறையாக பங்கெடுத்த மிஃபா அணி முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜே.டி.தி அணியை எதிர்கொண்ட நிலையில் நமது அணியின் அதிரடியில் ஜே.டி.தி அணி தோல்வியை தழுவியது.

நமது அணியின் வெற்றி சமுதாயத்தினர்களின் வெற்றி என மிஃபா அணியின் தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

லார்கின் அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நமது அணியினர் அதிரடியாக விளையாடி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. நமது அணியின் சார்பில் ஷெர்மன்,பியோம் ஆகியோர் கோல்களை புகுத்தினர்.

மலேசிய காற்பந்து துறையில் மிஃபாவின் இந்த வெற்றி போற்றுதலுக்குரியது என காற்பந்து ஆர்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்.

அனுபவம் இல்லாத மிஃபா அணியின் வெற்றி சரித்திரம் வாய்ந்தது எனவும் குறிப்பிட்டு உள்ளனர். இந்த வெற்றி நமது வீரர்களின் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என பயிற்றுநர் கே.தேவன், மேலாளர் துவான் ஏ.எஸ்.பி ராஜன்,செயலாளர் அன்பானந்தன் ஆகியோர் கூறியுள்ளனர்.

நமது அணியின் தொடர் சாதனைகள் சமுதாயத்தினர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன