செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பக்காத்தானில் அன்வாருக்கு முக்கியத்துவம்! – அஸ்மின் அலி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பக்காத்தானில் அன்வாருக்கு முக்கியத்துவம்! – அஸ்மின் அலி

கோலாலம்பூர், ஆக. 6-

பக்காத்தான் ஹராப்பானில் கட்சியை வழிநடத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது நிரூபிக்கப்பட்டு விட்டதாக அதன் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

கட்சியில் அன்வார் தலைமைத்துவத்தின் வாயிலாக நன்மை கிடைப்பது உறுதியாகி விட்டது. இதில் எப்படி இருப்பினும் எந்தவொரு பிரிவினையுமின்றி இவருக்கு ஆதரவு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது உண்மையில் அன்வாரைத் தவிர வேறு யாருமில்லை வேட்பாளர் நியமனத்திலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது என பத்திரிகையாளர்களிடம் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சித் தலைவருக்கான வேட்பாளர் நியமனத்தில் அன்வார் இப்ராஹிம் போட்டியின்றித் தேர்வுப் பெற்றார்.

இதில் அவர் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து தமது துணைவியார் வகித்து வரும் கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார்.

இதனிடையே கட்சித் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது பற்றி குறிப்பிடுகையில்,தாம் அதைக் கட்சி உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விட்டதாக பொருளாதார விவகாரத் துறை அமைச்சருமான அஸ்மின் அலி மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன