சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வாருக்காக பதவிகளை விட்டுக் கொடுக்க மாட்டேன்! – டாக்டர் வான் அஜிஸா
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாருக்காக பதவிகளை விட்டுக் கொடுக்க மாட்டேன்! – டாக்டர் வான் அஜிஸா

கோலாலம்பூர், ஆக.6-

தம் கணவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிகேஆர் தலைவராக வெற்றி பெற்றாலும் துணைப் பிரதமர் பதவியைத் தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பண்டான் தொகுதி எம்.பி பதவியையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வான் அஜிஸா குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சித் தலைவர் தேர்தலில் அன்வார் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதில் ஏற்கனவே அப்பதவியில் இருந்த வான் அஜிஸா அதிலிருந்து விலகிக் கொண்டார்.

தமது தந்தைக்காகத் தமது நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்கப் போவதாக வெளியானத் தகவலை நூருல் இசா அன்வாரும் மறுத்துள்ளார்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் செயல்படுத்த சில திட்டங்களை நான் கொண்டிருக்கிறேன். இந்த 5 ஆண்டுகாலத் தவணையில் அவர்களை எம்.பிக்களாகக் காண்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என பத்திரிகையாளர்களிடம் அத்தொகுதி எம்.பி.யுமான நூருல் இசா குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன