அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > படுத்த படுக்கையாக கிடக்கும் ஞானசீலனுக்கு டத்தோஸ்ரீ ஜெயந்திரன் 10ஆயிரம் வெள்ளி நன்கொடை!
சமூகம்முதன்மைச் செய்திகள்

படுத்த படுக்கையாக கிடக்கும் ஞானசீலனுக்கு டத்தோஸ்ரீ ஜெயந்திரன் 10ஆயிரம் வெள்ளி நன்கொடை!

லிங்கி, ஆக. 6-

னிதர்களுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படுவது இயல்பு என்றாலும், சிலரது வாழ்க்கையில் அது புயல்போல் வீசுகின்றது. அந்த வரிசையில் நெகிரி செம்பிலான் லிங்கி கெப்பாஸ் வட்டரத்தை சேர்ந்த ஞானசீலன் படுத்த படுக்கையாக கிடைக்கிறார்.

கெப்பாஸ் பகுதியில் ஒரு தோட்டத்து வீட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் குமார், வீட்டுக்குப் பின்புறத்திலுள்ள குருவிக் கூடு உற்பத்தி கட்டடத்தில் பாதுகாவலராக பணியாற்றுகிறார். இவருக்கு மாத வருமானமாக 450 வெள்ளி மட்டுமே வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் குமாரின் முத்த மகன் ஞானசீலன் (வயது 22) சாலை விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். ஞானசீலன் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக தமது பெருதவியாக இருந்ததாக குமார் கூறினார். குமாருரின் உடல்நிலையிலும் பாதிப்பு உள்ளது. இருந்தாலும் தமது மகனை அவரே கண்காணித்து வருகின்றார்.

இதனிடையே இவர்கள் இருவரின் நிலை குறித்த காணொலி சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. அந்த விடீயோ காட்சியை பார்த்த சமூக சேவையாளரும் தொழிலதிபருமான டத்தோஸ்ரீ ஜெயந்திரன் 10 ஆயிரம் வெள்ளி பெருமானமுள்ள பொருட்களை அக்குடும்பத்தினர்களுக்கு வழங்கினார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட ஞானசீலன் உணவு உண்பதில்லை. ஒரு நாளைக்கு 3 முறை பாலை மட்டுமே குடிக்கிறார். அவருக்கு பால் மாவு வாங்கவும், பெம்பெஸ் வாங்கவும் தமக்கு போதிய வருமானம் இல்லை என குமார் கூறியது தம்மை வெகுவாகப் பாதித்ததாக டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கூறினார்.

இதனால் ஞானசீலனுக்கு தேவைப்படும் பொருட்கள் உட்பட விட்டிற்கு தேவையான பொருட்களை அனைத்தையும் வாங்கி லோரியின் மூலம் இங்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே ஷெடோ பேக்ஸ் இயக்கத்தின் தலைவர் ஆனந்தனும் இவருடன் இணைந்து தம்முடைய பங்காக 3000 வெள்ளியை அக்குடும்பத்திற்கு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன