எஸ்எஸ்டி சட்டவரைவுகளை எதற்காக ஆதரிக்க வேண்டும்! – டத்தோஸ்ரீ ஸாஹிட் கேள்வி

கோலாலம்பூர், ஆக. 7 –

எஸ்எஸ்டி சட்ட வரைவுகளை தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2018ஆம் ஆண்டு விற்பனை வரி சட்ட வரைவையும் 2018 சேவை வரி சட்ட வரைவையும் ஆதரிப்பார்களா என்று ஜாஹிட் ஹமிடியிடம் கேட்டதற்கு, எதற்கு நாங்கள் ஆதரிக்க வேண்டுமென அவர் திருப்பிக் கேட்டார்.

தேசிய முன்னணி செனட்டர்கள் பெரும்பான்மையாக உள்ள மேலவையில் அந்தச் சட்ட வரைவுகளுக்கு ஆதரவு கிடைக்குமா என்றும் அவரிடம் கேட்டப்போது, முதலில் சட்டவரைவுகளைத் தாக்கல் செய்யட்டும். அதன் பின்னர் என்ன நடக்கிற்து என்பதைப் பார்ப்போம் என்றார்.

2014ஆம் ஆண்டு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)க்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் அவ்விரு சட்ட வரைவுகளும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வாசிப்புக்கு வந்தன.