அன்வார் குடும்பத்தில் 3 எம்பிகளா? பிரச்னை எழுமா?

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7-

பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் குடும்பத்திலிருந்து 3 பேர் ஒரே நேரத்தில் எம்.பிக்களாவதால் எந்தவொரு பிரச்னையுமில்லை என்று அரசியல் ஆய்வாளர் கமாருல் ஸாமான் யூசோப் தெரிவித்தார்.

இதற்கு முக்கியக் காரணம் அன்வாருக்கு வழிவிட அவரது துணைவியார், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் மற்றும் மகள், நூருல் இசா அன்வார் தங்களின் எம்.பி பதவிகளை விட்டு தயாராக இல்லை. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சில கூறிவருகிறார்கள்.

அன்வார் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைவதால் நாட்டின் ஆட்சிமுறையில் அவரின் குடும்ப ஆதிக்கம்தான் இருக்கும் என்று கூறி விட முடியாது. ஏனெனில் அவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள். அப்படி இம்மூவருக்கும் எம்.பிக்களாகும் தகுதி இருந்தால் அவர்கள் ஒரே நேரத்தில் எம்.பி.க்களானாலும் பிரச்னையில்லை.

இவ்வாறு பிகேஆரில் மட்டுமின்றி பார்ட்டி பெர்சத்து, பாஸ், அம்னோவிலும் கூட நிகழ்ந்துள்ளது. அப்படி அவர்கள் ஒரே நேரத்தில் அமைச்சர்களானால் மக்களுக்கு வேறு மாதிரியான எண்ணங்கள் தோன்றலாம். எனினும், இதற்கு பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் எந்தத் தடையுமில்லை என்று பத்திரிகையாளர்களிடம் கமாருல் குறிப்பிட்டார்.

இதனிடையே, அன்வார் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்புவது பக்காத்தான் அரசின் பயணத்தை இன்னும் நிலைப்படுத்தும்.

அவருக்கு நாடாளுமன்றத்தில் கட்சிப் பின்னிருக்கையில் அமரும் திறனும் உள்ளது. இதற்கு முன் பக்காத்தானில் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அன்வார் விடுதலையானதும் அமைச்சரவையில் இணைவதற்கு முன்பாக இந்த அரசில் அவருக்கு உடனடியாகப் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த அணுகுமுறை அவர் பிரதமரானதும் பக்காத்தான் அரசில் தொடர்ச்சி இருப்பதை உறுதி செய்யும் என்று கமாருல் மேலும் கூறினார்.