புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வாருக்கு பத்து தொகுதியை விட்டுத் தர பிரபாகரனுக்கு 2.5 கோடி?
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாருக்கு பத்து தொகுதியை விட்டுத் தர பிரபாகரனுக்கு 2.5 கோடி?

கோலாலம்பூர், ஆக.7-

பத்து நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு விட்டுக் கொடுக்க வெ.2.5 கோடி லஞ்சம் தமக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை பத்து தொகுதி எம்.பி, பி.பிரபாகரன் (வயது 22) மறுத்தார்.

அந்த செய்தியில் துளி அளவும் உண்மையில்லை. உண்மைக்கு புறம்பான விஷயத்திற்கு எப்படி கருத்துரைக்க முடியும் என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரபாகரன் குறிப்பிட்டார்.

இது உண்மையில் வதந்தியின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது என்பதை குற்றச்சாட்டு சுமத்தியவரே ஒப்புக் கொண்டுள்ளதை நாட்டின் மிகக் குறைந்த வயது கொண்ட எம்.பியுமான பிரபாகரன் சுட்டிக் காட்டினார்.

அதுவும் இது என்னைப் பிரபலப்படுத்துவதற்காகக் கூட இருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக பத்து தொகுதியின் முன்னாள் எம்.பி, தியான் சுவா தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த பின்னர் கடந்த மே 9ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பிரபாகரனுக்கு பிகேஆர் முழு ஆதரவு தெரிவித்தது.

இத்தேர்தலில் வெற்றி பெற்று இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன