புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுங்கள்; தொண்டர்கள் போராட்டம்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுங்கள்; தொண்டர்கள் போராட்டம்

சென்னை, ஆக 8

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்களும் சினிமா பிரபலங்களும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

மெரினாவில் இடம் மறுக்கப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நடந்து வருகிறது.

கலைஞரில் உடல் தற்போது கோபாலப்புரத்திலுள்ள வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் செல்லப்பட்டது. மக்கள் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சுற்றி வந்த வண்ணம் ‘வேண்டும், வேண்டும் மெரினா வேண்டும்’ என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்க வேண்டும் என கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன