கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 8-

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையில் இடம் தர முடியாது என்று தமிழக அரசு கூறியிருந்தது!

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் கடற்கரைக்குப் பதில் காந்தி மண்டப வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு தமிழக அரசின்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இறந்த பிறகு கலைஞர் கருணாநிதி போராடி வெற்றி பெற்றதாக திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளார்கள். ஸ்டாலின், கனிமொழி, கலாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின் தீர்ப்பை அறிந்தவுடன் கண்ணீர் விட்டு அழுதார்கள்.