அதிவேக ரயிலை செலுத்தும் பிரதமர் துன் மகாதீர்!

கோலாலம்பூர், ஆக 8-
ஜப்பானுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கியூஷு இரயில் நிலையத்தில் ஷின்கான்சென் எனும் அதிவேக ரயிலை இயக்கும் அனுபவத்தை நேரடியாக பெற்றார்.
இந்த அதிகவேக ரயிலை இயக்குவது தமக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்று அவர் தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மழை, பனி, பகல், இரவு ஆகிய வானிலைக்கு ஏற்ப இந்த ரயிலின் ஆற்றல் அமைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த அதிவேக ரயிலும் செலுத்தும் காணொளியையும் அவர் டிவிட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
துன் மகாதீர் திங்கட்கிழமை தொடங்கி ஜப்பான், ஃப்யூகூவோகாவில் இருக்கிறார்.