புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அடுத்த வாரத்தில் குடும்பப் பெண்களுக்கு இபிஎப்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அடுத்த வாரத்தில் குடும்பப் பெண்களுக்கு இபிஎப்

கோலாலம்பூர், ஆக.8-
தன்னார்வ ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் குடும்பப் பெண்கள் தரமான சமூகப் பாதுகாப்பைப் பெற்று 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுவதில் தங்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

அடுத்த வாரம் 15ஆம் தேதி தொடங்கவிருக்கும் இத்திட்டத்தில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் 1 மாதத்தில் குறைந்தபட்சம் 5 வெள்ளியை தங்கள் இபிஎப் கணக்கில் செலுத்தலாம். அரசு மாதத்திற்கு 40 வெள்ளியை அவர்களுக்குச் செலுத்தும் என அவர் கூறினார்

இதில் தொடக்கமாக திருமணமானப் பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள், இ திட்டத்தின் கீழ் பதிந்துக் கொண்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் இவர்கள் வழங்கும் 5 வெள்ளி தங்களின் எதிர்காலத்திற்காகப் பணம் சேமித்து வைக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் என இபிஎப்பின் 2018ஆம் ஆண்டிற்கான அனைத்துலகச் சமூகப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சருமான வான் அசிஸா இவ்வாறு தெரிவித்தார்.

இரண்டாம் கட்டமாக அரசு இவர்களுக்கு 50 வெள்ளியாக தொகையை அதிகரிப்புச் செய்யும். இதில் வெ.10 இவர்களுக்கான சொக்சோ பாதுகாப்புத் திட்டத்தில் சேர்க்கப்படும். இதனை அடுத்தாண்டுத் தொடக்கத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதால் இதற்கு சில சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அதன் பிறகு இது 3ஆம் கட்டத்திற்கு விரிவுப்படுத்தப்பட்டு கணவன்மார்களின் இபிஎப் தொகையிலிருந்து 2 விழுக்காடு மனைவிமார்களின் இபிஎப் கணக்கில் போடப்படும். இந்த 3ஆம் கட்டத்திற்கு வர காலம் பிடிக்கும் என்று கூறப்படுவதற்குக் காரணம் இதற்கு முதல் 1991 இபிஎப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதனால் இத்திட்டம் வரும் 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுவதாக அவர் சொன்னார்.

இம்முயற்சி உண்மையில் பக்காத்தான் ஹராப்பான் அளித்த 10 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்தை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன