அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > தயவு செய்து கலைந்து செல்லுங்கள்; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தயவு செய்து கலைந்து செல்லுங்கள்; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, ஆக 8
ராஜாஜி அரங்கத்தை விட்டு தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் கருணாநிதியின் ஊர்வலம் அமைதியாக நடைபெறும். தயவு செய்து கலந்து செல்லுங்கள் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணாநிதியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி கருணாநிதியின் உடல் அருகே செல்வதால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்நிலையில் போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறும். உங்கள் சகோதரனாக கேட்கிறேன். தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன