புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பந்தாய் டாலாம் பிபிஆர் 7ஆவது மாடியில் தீ!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பந்தாய் டாலாம் பிபிஆர் 7ஆவது மாடியில் தீ!

கோலாலம்பூர், ஆக. 9-

பந்தாய் டாலாம், பந்தாய் ரியா பிபிஆரின் 7ஆவது மாடியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக அழிந்தது.

இச்சம்பவம் தொடர்பில் பிற்பகல் 1.57 மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து செபூத்தே, ஹங் துவா தீயணைப்பு நிலையங்களிலிருந்து 3 குழுக்கள், 7 தீயணைப்பு இயந்திரங்களுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை இயக்குநர், கிருடின் ட்ரஹ்மான் தெரிவித்தார்.

இதில் தீ மற்ற வீடுகளுக்கும் பரவாமல் இருப்பதைத் தடுக்க தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடினர்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைப்படி தீ மற்ற இடங்களுக்குப் பரவுவதற்கு முன்பு தூங்கும் அறையில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அதை முற்றாக பிற்பகல் 2.35 மணிக்கு அணைப்பதற்கு முன்பு ஓரளவுக் கட்டுப்படுத்த முடிந்தது.

இதில் யாரும் காயப்படவில்லை. இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம், அதில் ஏற்பட்ட மொத்த இழப்பீடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ஓர் அறிக்கையில் கிருடின் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன