அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் புதிய கட்டட திருப்பணி! பொதுமக்களிடம் உதவிக்கரம்
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் புதிய கட்டட திருப்பணி! பொதுமக்களிடம் உதவிக்கரம்

கோலாலம்பூர், ஆக. 9-
ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடம் வருங்கால சந்ததியருக்கான 2 மாடிகள் கொண்ட கட்டடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிப்படை வேலைகள் 10 விழுக்காடு பூர்த்தியாகியுள்ள நிலையில், இந்த கட்டட கட்டுமானத்திற்காக பொதுமக்கள் தங்களால் ஆன உதவிகளை முன்வந்து வழங்க வேண்டுமென இத்திருமடத்தின் தோற்றுநர் சுவாமி மகேந்திரா கூறினார்.

மாணவர்களுக்கு சிறு வயதிலேயே சமயக் கல்வியை ஊட்டி வளர்க்க வேண்டியது நமது கடமையாகும். ஆனால் அதை போதிப்பதற்கு மோதுமான இடவசதி நம்மிடம் இருப்பதில்லை. இதனால் இம்மாதிரியான சமூக சேவைகளில் ஈடுபட பொதுமக்கள் அஞ்சுகிறார்கள் என் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 200 மாணவர்களுக்கு சமயம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். குறிப்பாக நமது சமயத்தில் இறை வழிபாடு என்பது எவ்வாறான வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கின்றோம். அதோடு சமய சிந்தனயை அவர்கள் மனதிற்குள் விதைக்கின்றோம். போதுமான இட வசதி, சொந்தமான கட்டடம் இருந்தால் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு இந்த பயிற்சிகளை வழங்க முடியுமென சுவாமி மகேந்திரா நம்பிக்கை தெரிவித்தார்.

நமது மாணவர்களுக்கு சமய பயிற்சிகளையும் நமது சமயத்தின் நெறிமுறைகளை கற்றுத் தர நமக்காக ஒரு இடம் இந்த தலைநகரில் இருக்க வேண்டும். இந்த இடம் உருவாக்கப்பட்ட பின்னர், சமய நிகழ்ச்சிகளை யார் வேண்டுமானாலும் இங்கு நடத்திக் கொள்ளலாம். இப்போது இந்த கட்டடத்தை எழுப்புவதற்கு அனைவரும் தமக்கு தோள் கொடுக்க வேண்டுமென சுவாமி மகேந்திரா கேட்டுக் கொண்டார்.

சமய சிந்தனை மேலோங்கினாலே நமது சமுதாயம் அனைத்து பிரச்னைகளிலிருந்தும் வெளிப்படும். குறிப்பாக பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே சமய நெறிமுறைகளை கற்றுத் தந்தால், அவர்கள் அனைத்து நிலைகளிலும் மேம்படுவார்கள். குறிப்பாக மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியிலும் சிறந்த அடைவுநிலையை நமது மாணவர்களால் உறுதி செய்ய முடியும்.

இந்த பயிற்சியின் உண்மை நோக்கத்தை அறிந்தவர்களும், இதனால் ஏற்படும் மாற்றங்களை அறிந்தவர்களும் தங்களின் பிள்ளைகளை இந்த பயிற்சிக்கு அனுப்பி வைக்கின்றார்கள். போதுமான இடவசதி, சொந்த கட்டடம் இல்லாத காரணத்தால் அனைவருக்கும் இந்த பயிற்சியில் இடம் தர முடியவில்லை. இதை கருத்தில் கொண்டுதான் சொந்த கட்டடம் கட்டும் பணியில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடம் இறங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த கட்டடத்தை சமய நிகழ்ச்சிக்காகவே முழுமையாக பயன்படுத்தும் திட்டமும் உண்டு. தற்போது நாட்டிலுள்ள ஆலயங்களில் தமிழ்நாட்டு அர்ச்சகர்கள்தான் பணிபுரிகின்றார்கள். இந்த திருமடத்தில் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்வது எப்படி என்பது குறித்தும் 3 ஆண்டுகள் பயிற்சிகளை வழங்கவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 4ஆவது மாதம் இதன் அடிப்படை கட்டுமானப் பணி தொடங்கியது. பொதுமக்கள் உட்பட கொடைநெஞ்சர்கள் இந்த திருப்பணிக்கு உதவிக்கரம் நீட்டினால், அடுத்த ஆண்டு மத்திக்குள் இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும்.

ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் காப்பாளர் கணபதியின் முயற்சியில் கட்டடத்திற்கான நிலம் அம்பாங் ஜாலான் பெசார் தாசெக் பெர்மாயில் வாங்கப்பட்டது. அவரின் துணையுடன் இதன் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெறுமென நம்புவதாகவும் சுவாமி மகேந்திரா கூறினார்.

மலேசிய இந்து சேவை மையம் இதன் கட்டுமான பணிக்கு தேவையான உதவிகளை வழங்கி உறுதுணையாக இருந்து முன்னெடுக்குமென அதன் தலைவர் சுவாமி ராமாஜி குறிப்பிட்டார். இந்த கட்டுமானத்திற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்று நினைக்கும் அன்பர்கள் CIMB – 880−0251960−4 என்ற வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கலாம். மேல் விவரங்களுக்கு 012−2972600 அல்லது 019−3205265 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். Sri Aathi Sankarar Thirumadam Swami Mahendra என்ற ஃபேஸ்புக் பக்கத்தையும் வலம் வரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன