வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பி40 பிரிவினருக்கு இலவச மருத்துவ பாதுகாப்புத் திட்டம்
முதன்மைச் செய்திகள்

பி40 பிரிவினருக்கு இலவச மருத்துவ பாதுகாப்புத் திட்டம்

கோலாலம்பூர், ஆக. 10
குறைந்த வருமானம் பெறக்கூடிய பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கான இலவச மருத்துவ பாதுகாப்புத் திட்டம் இவ்வாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 30 விழுக்காட்டினர் மருத்துவ சுகாதார காப்புறுதியை கொண்டிருக்கின்றனர். அதில் 15 விழுக்காட்டினர் சொந்தமாக மருத்துவ பாதுகாப்பு காப்புறுதியை வாங்கியுள்ளனர். மீதமுள்ள 10 முதல் 15 விழுக்காட்டினர் வரை தங்கள் முதலாளிகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பை பெற்றுள்ளனர் என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

பி40 பிரிவு தொடங்கி அனைத்து மலேசியர்களுக்கும் சமூக சுகாதார காப்புறுதி பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் என தலைநகரில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய், சிகிச்சை தொடர்பான மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பி40 பிரிவில் பெரும் பகுதியினருக்கு ஏற்கெனவே மருத்துவக் காப்புறுதி இருக்கலாம். எனவே, இத்திட்டத்தை அமல்படுத்தும் போது அனைத்து மலேசியர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை ஏற்படுத்தி கொடுக்க முடியும். இது தொடர்பான நிதி குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு செய்யும் என அவர் சொன்னார். .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன