புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எஸ்எஸ்டி பாதிப்பை ஏற்படுத்தாது-டத்தோ ராமநாதன்
முதன்மைச் செய்திகள்

எஸ்எஸ்டி பாதிப்பை ஏற்படுத்தாது-டத்தோ ராமநாதன்

கோலாலம்பூர், ஆக. 10
அடுத்த மாதம் அமல்படுத்தப்படவுள்ள எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என கேஎல்எஸ்சிசிஐ எனப்படும் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியினால் நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தது. இந்நிலையில், இந்த எஸ்எஸ்டி வரியினால் பொருள்களின் விலை உயருமா குறையுமா என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வந்தனர். ஆனால், குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே எஸ்எஸ்டி வரியை செலுத்தினால் போதும் என்பதால் மக்களுக்கு பாதிப்பில்லை என்றும் தங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு இருக்கும் எனவும் அவர் கூறினார்.

இந்த எஸ்எஸ்டி அமலாக்கம் குறித்து முழு விவரங்கள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்ற காரணத்தால் கேஎல்எஸ்சிசிஐ ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்களுக்கு விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த விளக்கக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ராமநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

கேஎல்எஸ்சிசிஐ மற்றும் திஎன்சிசிஐ எனப்படும் தமிழ்நாட்டு வர்த்தக தொழில்துறை சம்மேளனமும் எதிர்வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி மதுரையில் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது. வர்த்தக வாய்ப்பை வளப்படுத்தி ஒத்துழைப்பு நல்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

கேஎல்எஸ்சிசிஐயிலிருந்து சுமார் 30 உறுப்பினர்கள் இந்த உடன்படிக்கை ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதாகவும் இந்நிகழ்வில் விவசாயம், உணவு மற்றும் குளிர்பான ஏற்பாடுகள், உணவு பதப்படுத்தும் முறை, தளவாடங்கள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன