ஜிஎஸ்டி பணத்தை பக்காத்தான் செலவு செய்துவிட்டதா?

0
3

கோலாலம்பூர், ஆக. 10
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 1800 கோடி வெள்ளி ஜிஎஸ்டி பணத்தை பக்காத்தான் அரசாங்கம் செலவு செய்து விட்டதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 1800 கோடி வெள்ளி ஜிஎஸ்டி பணம் தேசிய முன்னணியால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கும் வேளையில், அரசு ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து அந்தப் பணத்தை பக்காத்தான் அரசாங்கம் செலவு செய்து விட்டது என்று நஜிப் குற்றஞ்சாட்டினார்.

ஜிஎஸ்டி வரியை ஜூன் மாதம் 1ஆம் தேதி அகற்ற பக்காத்தான் அரசு முடிவு செய்ததை தொடர்ந்து அந்தப் பணத்தையெல்லம் சொந்தச் செலவுகளுக்கு அரசாங்கம் பயன்படுத்தி விட்டது. ஜிஎஸ்டி அகற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக எஸ்எஸ்டி வரியும் இல்லாத நிலையில் அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை. எனவே அந்த 11800 கோடி வெள்ளி பணத்தை பக்காத்தான் அரசாங்கம் செலவு செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.