புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் கேரளா
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் கேரளா

திருவனந்தபுரம், ஆக 10
கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த வெள்ளத்தால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் கேரளாவே மொத்தமாக மூழ்கி உள்ளது,

இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு தீவிரமாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கண் முன்னே கட்டிடங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் நடக்கிறது. மிக மோசமான வரலாற்று அழிவை அம்மாநிலம் தற்போது எதிர்கொண்டு உள்ளது.

ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை இதனால் 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. தற்போது முழு கொள்ளளவை இந்த அணை எட்டி இருக்கிறது. அங்கு பெய்யும் கனமழையால் இந்த அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. மலை பகுதிகள், சாலைகள், கிராமங்கள் எல்லாமும் மொத்தம் நீரில் மூழ்கி அழிந்து இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன