வியாழக்கிழமை, ஜனவரி 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கட்டுமான பொருட்களுக்கு எஸ்எஸ்டி இல்லை
முதன்மைச் செய்திகள்

கட்டுமான பொருட்களுக்கு எஸ்எஸ்டி இல்லை

கோலாலம்பூர், ஆக. 12
கட்டுமான பொருட்களுக்கு எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை சேவை வரி விதிக்கப்படாது என நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் மணல், செங்கற்கள், சிமெண்டு போன்ற கட்டுமானப் பொருட்களுக்கு 6 விழுக்காடு ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி அமலில் இருந்ததால் கட்டுமான செலவினங்களும் அதிகரித்ததோடு வீடுகளின் விலையும் உயர்ந்தது என அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஜிஎஸ்டி அகற்றப்பட்டு எஸ்எஸ்டி அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், இந்த சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிமெண்டு, இரும்பு போன்ற கட்டுமான பொருட்களுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படாது. இதன் மூலம் கட்டுமாணச் செலவு குறையும் என மத்திய அரசு எதிர்பார்க்கப்படுவதாகவும் வரிச் சுமை குறைவதால் மேம்பாட்டாளர்களும் கட்டடங்களை வாங்குவோரும் நன்மை பெறமுடியும் என்றும் அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன