புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 4 பில்லியன் கடனை வசூலிக்க பிடிபிடிஎன் இலக்கு
முதன்மைச் செய்திகள்

4 பில்லியன் கடனை வசூலிக்க பிடிபிடிஎன் இலக்கு

கோலாலம்பூர், ஆக. 8-

இவ்வாண்டு இறுதிக்குள் உயர்கல்வி கடனுதவி வாரியம் (பிடிபிடிஎன்) 4 பில்லியன் கடனுதவியை வசூலிக்க இலக்கு கொண்டிருப்பதாக உயர்கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ தெரிவித்தார்.

கடந்தாண்டு 2 பில்லியன் ரிங்கிட் பிடிபிடிஎன் கடனை திரும்ப வசூலிக்க இலக்கு கொண்டிருந்த நிலையில் 3.4 பில்லியன் நிதி வசூலிக்கப்பட்டது. அவ்வகையில், இந்த பிடிபிடிஎன் அதன் இலக்கை நிச்சயமாக அடைய முடியும் என அவர் கூறினார்.

பிடிபிடிஎன் கடனுதவியை திருப்பி செலுத்துவது எளிமையாக்கப்பட்டதோடு அதனை மேம்படுத்தியதைத் தொடர்ந்து கருப்பு பட்டியலிடப்பட்டவர்களில் 284,210 பேர் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் தாங்கள் பெற்ற கல்வி கடனுதவியை முழுமையாக செலுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுடனான கேள்வி பதில் அங்கத்தில் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ குறிப்பிட்டார்.

      முன்னராக, தேசிய முன்னணியின் பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி பிடிபிடிஎன் கடனுதவி பெற்றவர்களின் விவகாரங்கள் குறித்து கேள்வியெழுப்பினார். அவரது கேள்விக்கு டத்தோஸ்ரீ இட்ரிஸ் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன