முகப்பு > சமூகம் > கேமரன் மலையில் வியூகம் வகுக்கும் சிவராஜ்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலையில் வியூகம் வகுக்கும் சிவராஜ்!

கேமரன்மலை, ஆக. 8-

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றமாக மாற்றிய நாளிலிருந்து இன்று வரை 3 பொதுத் தேர்தலை சந்தித்த இடம் கேமரன் மலை. 2008லும் 2013லும் அடித்த அரசியல் சுனாமியில்கூட தேசிய முன்னணியின் கைநழுவி போகாத நாடாளுமன்றமாக கேமரன் மலை திகழ்ந்து வருகிறது.

ம.இ.கா.வின் இடமாக ஆழமாக முத்திரை போடப்பட்ட இவ்விடத்தில் தற்போது கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் டத்தோஸ்ரீ தேவமணியும் அவரைத் தொடர்ந்து, டத்தோஸ்ரீ பழனிவேலும் போட்டியிட்டு வென்றனர். ஆனால் உட்கட்சி விவகாரங்களினால் கட்சி உறுப்பியத்தை பழனிவேல் இழந்தாலும், கேமரன்மலை ம.இ.கா.வின் நற்காலி என்பதில் தேசிய முன்னணியின் தலைமைத்துவம் தெளிவாக இருக்கிறது.

அவ்வகையில், முறைப்படி கட்சியின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளராக தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் நியமிக்கப்பட்டு கடந்த 3 வாரங்களாக வேலை செய்து வருகிறார். அரசியல், அரசு சாரா இயங்கங்கள், தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், இளைஞர்கள், வணிகர்கள், மாணவர்கள் என ஓவ்வொரு பிரிவினராக சந்தித்து வருகிறார்.

இது தொடர்பாக டத்தோ சிவராஜ் அவர்களைத் தொடர்புக் கொண்டு பொழுது, கேமரன் மலையில் தன்னை வியத்தது உழைப்பை மூலதனமாக கொண்டு வாழும் மக்கள் என்றார். விவசாயத் துறையிலும் வணிகத்துறையிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழும் மக்களை தம்மால் காண முடிகிறது என்றார். ஒவ்வொரு சாராருக்கும் பல்வேறான வகையில் உதவிகள் தேவைப்படுகிறது எனவும் தம்மால் இயன்றவரை கட்சியின் தலைவர் மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியத்தின் ஆதரவுடன் உதவி வருவதாகவும் கூறிப்பிட்டார்.

தேசிய முன்னணி அரசாங்கத் திட்டங்கள் பரவலாக கேமரன் மலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, புளு வேலி தோட்டத்தில் புதிதாக 60அடி உயரம் கொண்ட ராஜ கோபுரத்துடன் ஒரு ஆலயமும், அதன் பக்கத்திலே சுற்று வட்டார பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒரு சமூகநல மண்டபமும், புளுவேலி தமிழ்ப்பள்ளி புதிதாக நிர்மாணிக்கப்பட்டும் வருகிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த மூன்று நிர்மாணிப்பு பணிகளும் நிறைவு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி இன்னும் பல தேசிய முன்னணி அரசாங்கத் திட்டங்கள் கேமரன் மலையில் நடக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் டத்தோ சிவராஜ் தெரிவித்தார்.

டத்தோ சிவராஜ் வருகை குறித்து வட்டார பொதுமக்களிடம் விசாரித்தப் பொழுது, மிகவும் துடிப்பான இளம் தலைவராக பத்திரிக்கை செய்திகளில் பார்த்திக்கிறோம். முதல் சந்திப்பிலேயே நிச்சயம் கேமரன் மலையின் மேம்பாட்டிற்கும் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வழிகளிலும் நிச்சயம் உழைப்பார் எனும் நம்பிக்கையை கொடுக்கிறார் என தெரிவித்தனர். அது மட்டுமின்றி பழைய முகங்களுக்கு மத்தியில் ஒரு இளைஞரின் தலைமைத்துவம் கேமரன் மலைக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் எனவும் தாங்கள் நம்புவதாக தெரிவித்தனர்.

செப்டம்பர் மாதத்திற்கு பிறகு எந்நேரத்திலும் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் அனைவரும் ஆவலுடன் கவனிக்கவிருக்கும் நாற்காலியாக கேமரன் அமையும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

One thought on “கேமரன் மலையில் வியூகம் வகுக்கும் சிவராஜ்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன