வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > எம்ஐஎல்எப்எப் மாபெரும் இசைநிகழ்ச்சி! டிக்கெட்கள் பரபரப்பான விற்பனையில்…
கலை உலகம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

எம்ஐஎல்எப்எப் மாபெரும் இசைநிகழ்ச்சி! டிக்கெட்கள் பரபரப்பான விற்பனையில்…

கோலாலம்பூர், ஆக. 13-

மலேசியாவில் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தனி முத்திரை பதிப்பதில் மோஜோ நிறுவனம் தனக்கான அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. கடந்த 3ஆண்டு காலமாக மோஜோ இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மகத்தான ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.

அண்மையில் ரெட்ரோ ரஹ்மான் இசை நிகழ்ச்சியை நடத்தியபோது இந்நிகழ்ச்சிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் முன்னணி இசை கலைஞர்களான பெனி டயால், ஆண்ரியா ஆகியோருடன் சூப்பர் சிங்கர் சத்திய பிரகாஷ், பூஜா ஆகியோரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

மோஜோ படைக்கும் இவ்வாண்டின் மிகப் பெரிய இசை நிகழ்ச்சியாக இது அமையவிருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற, மசாலா காபே, தாய்குடம் பிரிச், ஹரிச்சரண் இசைக்குழு, பாடகர் கார்த்திக் இசைக்குழு, அலாப் ராஜூ இசைக்குழு, சிட் ஸ்ரீராம் போன்ற முன்னணி கலைஞர்களை கொண்டு மோஜோ இசை இந்நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களை கவர்ந்தார்கள்.

இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் மோஜோ தனி முத்திரை பதித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட சிறப்பு டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதேபோல் பி வரிசையில் விற்றுத் தீர்த்துள்ளன. சி வரிசை மற்றும் ரோக் வரிசைக்கான டிக்கெட்கள் பரபரப்பான விற்பனையில் உள்ளன.

அதேபோல் ஏ பிரிவு, விஐபி, விவிஐபி ஆகிய டிக்கெட்கள் இன்னமும் விற்பனைக்கு உள்ளன. மோஜோவின் கடந்த நிகழ்ச்சியின் போது இறுதி நேரத்தில் டிக்கெட்களை வாங்கலாம் என நினைத்த பல ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் முன்கூட்டியே டிக்கெட்களை வாங்கிக் கொள்ள வேண்டுமென நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ரத்னகுமார் நினைவுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன