முகப்பு > கலை உலகம் > ’96’ சினிமாவுக்கு புதுசு..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

’96’ சினிமாவுக்கு புதுசு..!

புதிய ஜோடியும் புதிய இயக்குனரும் அறிமுகமாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘96’
`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதன் முறையா ஜோடி சேர்ந்துள்ளனர்.
காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருப்பதாக தகவல்.
சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ள, கோவிந்த் மேனன் இசையில் சமீபத்தில் வெளியாகிய `காதலே காதலே’ பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன