வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்கிறார் மார்சியல் ?
விளையாட்டு

மென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டிக்கிறார் மார்சியல் ?

மென்செஸ்டர், ஆக.30-

மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் அதன் நிர்வாகி ஜோசே மொரின்ஹோவுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள இளம் ஆட்டக்காரர் அந்தோனி மார்சியல் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 22 வயதுடைய அந்தோனி மார்சியல், மென்செஸ்டர் யுனைடெட் உடனான ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டு மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்நிலையில் அந்தோனி மார்சியலுக்கு புதிய ஒப்பந்தத்தை வழங்க மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஆலோசித்துள்ளது. மார்சியலுக்கு விற்க வேண்டும் என்பதில் மொரின்ஹோ உறுதியாக உள்ளார். ஆனால் மார்சியலை விற்பதில் மொரின்ஹோவுக்கும் மென்செஸ்டர் யுனைடெட் தலைமை நிர்வாக அதிகாரி எட் வூட்வேர்ட்டுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டுள்ளது.

19 வயதில் 3 கோடியே 60 லட்சம் ஈரோ டாலரில் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இணைந்த மார்சியல் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என வூட்வேர்ட் நம்பிக்கைக் கொண்டுள்ளார். எனினும் மார்சியல் மீது நம்பிக்கை இழந்துள்ள மொரின்ஹோ அவரை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

தற்போது மென்செஸ்டர் யுனைடெட்டில் மொரின்ஹோ எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு மார்சியல் பிரச்சினையும் அச்சாரம் போட்டுள்ளது. மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பில் இருந்து மொரின்ஹோ நீக்கப்படலாம் என்பதால் தமது ஒப்பந்தத்தை நீட்டிக்க மார்சியல் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன