வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > போர்டோ பயிற்றுனர் பொறுப்பை நிராகரித்தார் ஹென்ரி !
விளையாட்டு

போர்டோ பயிற்றுனர் பொறுப்பை நிராகரித்தார் ஹென்ரி !

பாரிஸ், ஆக.30 –

போர்டோ கால்பந்து கிளப்பின் பயிற்றுனர் பொறுப்பை தியேரி ஹென்ரி நிராகரித்துள்ளதாக அந்த கிளப்பின் தலைவர் ஸ்டேபேன் மார்டின் தெரிவித்துள்ளார். அர்செனல் கால்பந்து கிளப்பின் முன்னாள் நட்சத்திரமான ஹென்ரி, போர்டோ கிளப்பின் பயிற்றுனராக பொறுப்பேற்பார் என இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்ப்ட்டது.

எனினும் அந்த கிளப் தற்போது நிலைத்தன்மையற்று இருப்பதால் ஹென்ரி தமது முடிவை கை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர்டோ பயிற்றுனர் பொறுப்பில் இருந்து குஸ்தாவோ போயேட் நீக்கப்பட்டதை அடுத்து ஹென்ரி அந்த பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் பெல்ஜியம் கால்பந்து அணியில் துணை பயிற்றுனராக பணியாற்றிய ஹென்ரி, பிரான்ஸ் கால்பந்து அணியுடன் 1998 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தையும் 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கிண்ணத்தையும் வென்றார். அதோடு அர்செனல் கால்பந்து கிளப்புடன் மூன்று முறை பிரீமியர் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன