மரியானோ டியாசை மீண்டும் விலைக்கு வாங்கிய ரியல் மாட்ரிட் !

0
14

மாட்ரிட், ஆக.30 –

பிரான்சின் லியோன் கால்பந்து கிளப்பில் இருந்து , மரியானோ டியாஸ் என்ற தாக்குதல் ஆட்டக்காரரை 3 கோடியே 30 லட்சம் ஈரோ டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 80 லட்சம் ஈரோ டாலரில், டியாஸ், ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து வெளியேறி லியோனில் இணைந்தார்.

தற்போது மீண்டும் அதே ஆட்டக்காரரை ரியல் மாட்ரிட் விலைக்கு வாங்கியுள்ளது. டாமினிக் குடியரசில் பிறந்த மரியானோ டியாஸ், ரியல் மாட்ரிட் கால்பந்து பயிற்சி கழகத்தில் உருவான ஓர் ஆட்டக்காரர்.  ஸ்பெயினின் செவியா கால்பந்து கிளப்பில் இணையவிருந்த மரியோனா டியாசை, இறுதி நிமிடத்தில் ரியல் மாட்ரிட் ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரான்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் கடந்த பருவத்தில், மரியானோ டியாஸ் லியோன் கிளப்பில் 18 கோல்களைப் போட்ட வேளையில் 7 கோல்களைப் போடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தார். இதன் வழி பிரான்ஸ் லீக் போட்டியில் 3 ஆவது இடத்தைப் பிடித்த லியோன் இந்த பருவத்துக்கான ஐரோப்பிய  வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.