கே.டி.எம் ரயில் சேவைகளில் ரொக்கப் பணமில்லாத கட்டண சேவை !

0
3

கோலாலம்பூர், ஆக.30-

வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி, கிள்ளான் பள்ளத்தாக்கில் கே.டி.எம் ரயில் சேவையில் ரொக்கப் பணமில்லாத கட்டண முறை அமல்படுத்தப்பட விருக்கிறது. இந்த புதிய முறையின் கீழ் பயணிகள் தங்களின் பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தை Touch ‘n Go  மற்றும் மை கார்ட் அட்டைகளை பயன்படுத்தி கே.டி.எம் ரயிலில் பயணம் செய்யலாம்.

முதல் கட்டமாக இளம் வயதினரிடமும் மாணவர்களிடமும்,  இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என கே.டி.எ நிறுவனத்தின் வருமான பிரிவின் தலைமை நிர்வாகி முஹமட் ஹீடேர் யூசோப் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கே.டி.எம் சேவையைப் பயன்படுத்துவோரில் 85 விழுக்காட்டினர் ரொக்கப் பணமில்லாத முறையை பயன்படுத்தி வருவதாக அவர் சொன்னார்.

15 விழுக்காட்டினர் மட்டுமே டோக்கன்களைப் பயன்படுத்தி தங்களின் பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த புதிய முறையின் மூலம் கே.டி.எம் முகப்புகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணச் சீட்டுகளை வாங்குவதை தடுக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அட்டைகளின் தொகையைக் கூட்டுவதற்கு ஏதுவாக  தொகைக் கூட்டும் இயந்திரங்களும் கே.டி.எம் நிலையங்களில் பொருத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டி காட்டினார்.